குஜராத்: ரசாயன ஆலையில் தீ விபத்து
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இயங்கிவந்த தனியார் ரசாயன ஆலையில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

குஜராத்: ரசாயன ஆலையில் தீ விபத்து (கோப்புப்படம்)

குஜராத்: ரசாயன ஆலையில் தீ விபத்து (கோப்புப்படம்)
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இயங்கிவந்த தனியார் ரசாயன ஆலையில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
காற்றின் வேகம் காரணமாக அருகிலிருந்த நான்கு ஆலைகளுக்கு தீ பரவியதால், அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் இயங்கிவந்த தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த ரசாயன ஆலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு ஒரு மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தை அருகில் பணிபுரிந்து வந்த கட்டுமானப் பணியாளர்கள் கண்டு தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விபத்து நேரிட்ட இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்து ஏற்பட்ட சிறுது நேரத்தில் அருகிலிருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
காற்றின் வேகம் காரணமாக அருகிலிருந்த 4 ஆலைகளுக்கும் தீ பரவியதால், அதனை அணைக்கும் பணியில் 40க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...