ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: விவசாய சங்கம்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என்று அகில இந்திய கிஸான் சபையின் பொதுச்செயலாளர் ஹன்னான் முல்லா தெரிவித்துள்ளார்.

News image
மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: விவசாய சங்கம்
Updated On :9 டிசம்பர் 2020, 6:23 am

DIN

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என்று அகில இந்திய கிஸான் சபையின் பொதுச்செயலாளர் ஹன்னான் முல்லா தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சில திருத்தங்களை வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து ஆலோசனை நடத்திய பிறகே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கும் இடையில் இதுவரை ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இன்று (புதன்கிழமை) 6-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறயிருந்த நிலையில், நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்கள், சில முக்கிய விவசாய சங்கத் தலைவர்களுடன் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாது என்றும், சில திருத்தங்களை மேற்கொள்வதாகவும், அதனை எழுத்துப்பூர்வமாக அளிப்பதாகவும் அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தையை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறாது என்று அகில இந்திய கிஸான் சபையின் பொதுச்செயலாளர் ஹன்னான் முல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, வேளாண் சட்டங்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக சில திருத்தங்களை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை நாங்கள் பார்வையிட வேண்டும். இன்று பிற்பகல் நாங்கள் எங்களுக்குள் ஆலோசனை நடத்தவுள்ளோம். 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் தெளிவாகவுள்ளோம். அவர்களின் எழுத்துப்பூர்வ திருத்தங்கள் குறித்து  ஆலோசித்து, மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.