ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிப்பதாக அறிவித்துள்ள விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

News image
மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு
Updated On :9 டிசம்பர் 2020, 11:45 am

DIN

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 14 நாள்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு மேற்கொண்டு வந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் இன்று (புதன்கிழமை) 6ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை எனவும், திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் சட்டத்திருத்தம் குறித்த பரிந்துரைகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை தாங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றும், போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் டிசம்பர் 12ஆம் தேதி தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்க உள்ளதாகவும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தால் தில்லி எல்லையில் காவல்துறையினர் அதிக அளவு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.