முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

கரோனா நோயாளிகள் வீட்டில் அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டக் கூடாது: உச்ச நீதிமன்றம்

கரோனா நோயாளிகள் வீட்டில் அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

கரோனா நோயாளிகள் வீட்டில் அனு நோட்டீஸ் ஒட்டக் கூடாது: உச்ச நீதிமன்றம்

Updated On :9 டிசம்பர் 2020, 12:28 pm


புது தில்லி: கரோனா நோயாளிகள் வீட்டில் அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா நோயாளிகளின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விவரம் அடங்கிய நோட்டீஸ் வீட்டு வாயிலில் ஒட்டப்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கரோனா நோயாளிகள் வீடுகளில் மாநில சுகாதாரத் துறை தரப்பில் கரோனா பாதித்தவர்களின் அடையாளத்தை வெளியிடும் வகையில் நோட்டீஸ் ஒட்டுவது தேவையற்றது, ஒருவேளை கரோனா பேரிடர் மேலாண்மை சட்டத்திற்குள்பட்டு சில குறிப்பிட்ட வேளைகளில் மட்டும் உயரதிகாரிகள் உத்தரவிட்டால் நோட்டீஸ் ஒட்டலாம் என்றும் உத்தரவிட்டு பொது நல வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதும், அதன் பரவல் காரணமாக எழுந்த அச்சத்தால் கரோனா பாதித்தவர்களின் வீடுகள் இருக்கும் சாலையே முற்றிலும் கட்டை மற்றும் சட்டங்கள் அடித்து மூடப்பட்டது.  போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், கரோனா நோயாளிகள் அதிகம் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டன. அந்தச் சாலைகளில் பயணிக்கவும் பொதுமக்கள் பயந்தனர்.

பிறகு அந்த நடைமுறை ஓரளவுக்கு தளர்த்தப்பட்டு, கரோனா நோயாளிகளின் வீட்டு வாயில்கள் அடைத்து, உள்ளே இருப்போர் வெளியே வர முடியாத வகையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

தற்போது அந்த நடைமுறைகள் முற்றிலு கைவிடப்பட்டு, நோயாளிகளின் வீட்டு வாயில்களில் நோட்டீஸ் மட்டும் ஒட்டப்பட்டு வருகிறது. இதுவும் உச்ச நீதிமன்ற உத்தர்வின் மூலம் தற்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.