தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நட்டா மீது தாக்குதல்: மகாராஷ்டிரத்தில் பாஜகவினர் போராட்டம்

ஜெ.பி.நட்டா மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மும்பையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

News image

நட்டா மீது தாக்குதல்: மகாராஷ்டிரத்தில் பாஜகவினர் போராட்டம் (கோப்புப்படம்)

Updated On :11 டிசம்பர் 2020, 6:16 am

DIN


பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மும்பையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி உருவப்படத்தை கிழித்தும், உருவ பொம்மையை சிதைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குவங்கத்தில் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளுக்காக துறைமுகப் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தபோது பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாஜகவின் மேற்கு வங்க மாநில கண்காணிப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கையில் காயம் ஏற்பட்டது. பாஜக தொண்டர்களும் காயமடைந்தனர். 

இந்நிலையில் இதனைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பி, அதனைக் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.