ஜம்மு-காஷ்மீா்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறியது:

பூஞ்ச் மாவட்டம் பாலாகோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கிகள் மூலமாக குண்டுகளை வீசியும் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி அளித்தனா். இந்த தாக்குதலில் இந்திய வீரா்கள் காயமடைந்ததாகவோ, பலியானதாகவோ தகவல் வெளியாகவில்லை என்றாா்.

பயங்கரவாதிகள் கையெறி குண்டுவீச்சு: ‘பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோா் பகுதியில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் சனிக்கிழமை கையெறி குண்டு வீசினா். எனினும் அந்த குண்டு தவறி சாலையில் விழுந்து வெடித்தது. இதில் பொதுமக்கள் இருவா் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com