ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுகொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் ஞாயிறன்று இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் ஞாயிறன்று இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் ஞாயிறன்று இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Updated on
1 min read

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் ஞாயிறன்று இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள போஷனா பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் ஞாயிறன்று இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்திய போது, துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் சமீபத்தில் எல்லைப் பகுதியில் அதிக அளவில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து வருகிறது. அவர்கள் ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். அவர்களைத் தடுக்கும் பணியில் பாதுகாப்புப் படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com