எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விவசாயிகளுக்கு ஆதரவாக பதவியை ராஜிநாமா செய்த பஞ்சாப் சிறைத்துறை டி.ஐ.ஜி.

தில்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சிறைத் துறை துணைத் தலைவர் லக்மிந்தர் சிங் ஜாகர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

News image
விவசாயிகள் போராட்டம்(கோப்புப்படம்)
Updated On :13 டிசம்பர் 2020, 1:23 pm

DIN


தில்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சிறைத் துறை துணைத் தலைவர் லக்மிந்தர் சிங் ஜாகர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

பஞ்சாப் மாநிலம் அபோஹாரில் உள்ள கிலியான்வாலி கிராமத்தைச் சேர்ந்த லக்மிந்தர் சிங் ஜாகர்  நவம்பர் 11, 1994 அன்று பஞ்சாப் சிறைச்சாலைத் துறையில் துணை கண்காணிப்பாளராக இணைந்தார். தற்போது சிறைத் துறையின் துணைத் தலைவராக உள்ளார். 2022 ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறவிருந்தார். மாநில சிறைத் துறையில் சேருவதற்கு முன்பு 1989 முதல் 1994 வரை ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார்.

விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தனது ராஜிநாமா கடிதத்தை அவர் பஞ்சாப் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார். பஞ்சாப் அரசு இன்னும் அவரது ராஜிநாமாவை ஏற்கவில்லை.

இதுகுறித்து ஜாகர், 'நான் முதலில் ஒரு விவசாயி, பின்னரே ஒரு காவல்துறை அதிகாரி. என் தந்தை பல கஷ்டங்களை எதிர்கொண்டு விவசாயம் செய்து என்னை படிக்க வைத்தார். என் கல்வி கட்டணத்தை செலுத்தியது எவ்வளவு கடினம் என்பதை என் தந்தை தெரிவித்தார். நான் விவசாயத்திற்கு எல்லாவற்றிற்கும் மேலாக கடமைப்பட்டிருக்கிறேன். அதனால்தான் நான் ராஜிநாமா செய்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.