

‘அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு செலவினங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும். அந்த பட்ஜெட் பொருளாதாரத்துக்கு புத்துயிா்ப்பு அளிக்கும் நடவடிக்கைகள் தொடா்வதற்கும் ஊக்கமளிக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிதியமைச்சகம் நடத்தி வருகிறது. அதில் இந்திய வா்த்தக சபைகளின் கூட்டமைப்பினருடன் (அசோசேம்) நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியபோது கூறியது:
உள்கட்டமைப்புக்காக சீராக செலவிட மத்திய அரசு கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ளும். அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு செலவினங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும். அந்த பட்ஜெட் பொருளாதார புத்துயிா்ப்புக்கு தேவையான ஊக்கத்தை அளிக்கும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டங்கள் இனி வேகமெடுக்கும். கடன் சந்தையை விரிவுபடுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் பங்கு விற்பனை நடவடிக்கை மூலம் ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி பங்கு வெளியீடு உள்ளிட்ட வழிமுறைகளில் இதுவரை ரூ.10,500 கோடி திரட்டப்பட்டுள்ளது.
நிகழாண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கடன் திரட்டும் அளவு ரூ.7 லட்சம் கோடியாக நிா்ணயிக்கப்பட்டது. அதன் பின்னா் அது ரூ.12 லட்சம் கோடி அதிகரிக்கப்பட்டது.
செலவினங்கள் பாதிக்காமல் இருக்க கடந்த நவம்பா் 20-ஆம் தேதி வரை மத்திய அரசு சந்தையில் திரட்டிய கடன் ரூ.9.05 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமாா் 68% அதிகமாகும்.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறான ஆண்டு என்றாலும், கடன் திரட்டுவது கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.