திருமலையில் 35,038 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 35,038 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 13,168 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
Updated on
1 min read


திருப்பதி: திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 35,038 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 13,168 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 10 ஆயிரம் உள்ளிட்டவை பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 3 மணிமுதல் இரவு 11 மணிவரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com