

மத்திய அரசின் ஐ.ஐ.டி. கல்வி நிலையங்களின் ஆசிரியர் பணியிட நியமனங்களில் சாதிரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டாம் என 8 பேர் கொண்ட நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
ஐ.ஐ.டி. கல்வி நிலையங்களில் ஆசிரியர் நியமனம் மற்றும் இடஒதுக்கீட்டை அமலாக்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக 8 பேர் கொண்ட நியுணர் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஏப்ரல் மாதம் அமைத்தது.
தில்லி ஐ.ஐ.டியின் இயக்குனரான ராம்கோபால் ராவ் தலைமையிலான இந்தக் குழு கடந்த ஜூலை மாதம் தனது அறிக்கையை மத்திய உயர்கல்வி கூடுதல் செயலரிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில் இந்த அறிக்கையில் ஐ.ஐ.டி. கல்வி நிலையங்களின் ஆசிரியர் நியமனங்களில் சாதிரீதியிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டாம் எனவும், மேலும் ஐ.ஐ.டி. கல்வி நிலையங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆராய்ச்சி, கற்பித்தல், சிறப்பம்சம் மற்றும் வெளியீடு ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் பிற உயர்மட்ட கல்வி நிறுவனங்களுடன் போட்டியிட இடஒதுக்கீடு முறைகளை அமல்படுத்துவதில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவின் இந்த பரிந்துரைகளுக்கு பல்வேறு மாணவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.