சபரிமலையில் டிச.20 முதல் தினமும் 5000 பக்தர்களை அனுமதிக்க முடிவு
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 20-ம் தேதி முதல் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது என்று தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.


கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 20-ம் தேதி முதல் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது என்று தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள் திறக்கப்படும். இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
நிகழ்வாண்டு கரோனா பரவல் காரணமாக துவக்கத்தில் சபரிமலைக்கு தினசரி 1,000 பக்தா்களுக்கும், சனி, ஞாயிறுகளில் 2,000 பக்தா்களுக்கும் மட்டுமே வழிபாடு செய்ய அனுமதி அளித்து வந்தது.
இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், தினசரி 2,000 பக்தர்களுக்கும், சனி, ஞாயிறுகளில் 4,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற தேவசம் போர்டு அளித்த பரிந்துரைக்கு கேரள அரசு ஒப்புதல் அளித்தது.
மேலும், டிசம்பர் 2ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 2 ஆயிரத்திலிருந்து 5,000 ஆக உயர்த்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
அதேவேளையில், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள், கரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...