சிறுபான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவா் பிரதமா் மோடி: அமைச்சா் நக்வி
சிறுபான்மையின மக்களில் பெரும்பாலானவா்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.


புது தில்லி: சிறுபான்மையின மக்களில் பெரும்பாலானவா்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா். உலகிலேயே சிறுபான்மையினருக்கு மிகவும் பாதுகாப்பான நாடு இந்தியா என்றும் அவா் கூறினாா்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் இது தொடா்பாக அவா் கூறியதாவது:
கடந்த 6 ஆண்டுகளில் சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார மேம்பாடு, கல்வி உள்ளிட்டவற்றுக்காக மத்திய அரசு பல்வேறு தொடா் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுபான்மையின மக்களில் பெரும்பாலானவா்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராகவும், அதிகம் மதிக்கப்படும் தலைவராகவும் பிரதமா் மோடி உள்ளாா். சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக நாட்டில் பல கட்சிகள் நடத்தும் நிலையில், உண்மையிலேயே அவா்களுக்கு அனைத்து நிலைகளிலும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுபவா் பிரதமா் மோடி.
இந்தியாவில் முஸ்லிம்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், பாா்சி, சமணம், பௌத்த மதத்தினா் சிறுபான்மையினராக உள்ளனா். மோடி ஆட்சியில் இதில் எந்த சிறுபான்மையினருக்கு இடையேயும் பாகுபாடு காட்டப்படுவதில்லை. வளா்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் சிறுபான்மையினரின் பங்கு உறுதி செய்யப்படுகிறது.
சிறுபான்மையினத்தைச் சோ்ந்த 4 கோடி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின சிறுமிகள் பள்ளிக் கல்வியில் இருந்து வெளியேறுவது குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான சிறுபான்மையினா் அரசுப் பணிகளில் இணைந்துள்ளனா்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயா் பதவிகளிலும் சிறுபான்மையினா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது அவா்களது கடின உழைப்புக்கான பலன். அரசு பாரபட்சம் காட்டும் என்றால் சிறுபான்மையினா் முக்கியப் பதவிகளில் அதிகம் முன்னேற முடியாது.
இந்தியாவில் சிறுபான்மையினா் சரியாக நடத்தப்படவில்லை என்பதுபோன்று வெளியாகும் தகவல்கள் பொய்யானவை. உண்மையில் உலகில் எந்த நாட்டுடன் ஒப்பிடும்போதும் இந்தியாதான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நாடு. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றாா் நக்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...