/

பஞ்சாப் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம், அத்தாரி பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

News image
பஞ்சாப் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Updated On :17 டிசம்பர் 2020, 5:00 am

DIN


அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம், அத்தாரி பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலம், அத்தாரி பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் எல்லையில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிகள், பல ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.