

தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள சுமார் 1000 கீ.மீ சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார் பிகாரைச் சேர்ந்து முதியவர் ஒருவர்.
பிகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யதேவ் மஞ்சி என்று 60 வயது முதியவர் தில்லி-ஹரியானா எல்லையில் உள்ள திக்ரிக்கு கடந்த 11 நாள்களாக ஏறக்குறைய 1000 கிலோ மீட்டர் மிதிவண்டியில் பயணம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதியவர்,
விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை உடனே ரத்து செய்யுமாறு மத்திய அரசிடம் முதியவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் எனது சொந்த ஊரான சிவான் மாவட்டத்திலிருந்து தில்லிக்கு வர 11 நாள்கள் ஆனது. வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுமாறு அரசிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த போராட்டம் முடியும் வரை நான் இங்கே தான் இருக்கப்போகிறேன் என்று கூறினார்.
புதிதாக இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த நவம்பர் 26 முதல் தேசிய தலைநகரான தில்லியில் வெவ்வேறு பகுதியிலிருந்தும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.