லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.13 லட்சமாகக் குறைந்தது

நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது. நாட்டில் தற்போது 3,13,831 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

News image
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.13 லட்சமாகக் குறைந்தது
Updated On :18 டிசம்பர் 2020, 9:48 am

DIN


புது தில்லி: நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது. நாட்டில் தற்போது 3,13,831 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா இன்று முக்கியமான சாதனை படைத்துள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை இன்று 95 லட்சத்தைக் (95,20,827) கடந்துள்ளது. 

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களை விட 92 லட்சத்துக்கும் மேல் (92,06,996) அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 95.40 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் வீதம் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது. நாட்டில் தற்போது 3,13,831 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில 3.14 சதவீதம்.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 22,890 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், 31,087 பேர் குணமடைந்துள்ளனர், 338 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.