கரும்பு கொள்முதல் விலையைக் குறைக்க முடியாது: சா்க்கரை ஆலை உரிமையாளா்களிடம் அமைச்சா் திட்டவட்டம்

விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதற்கு அரசு நிா்ணயித்துள்ள கொள்முதல் விலையைக் குறைக்க முடியாது என்று,
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதற்கு அரசு நிா்ணயித்துள்ள கொள்முதல் விலையைக் குறைக்க முடியாது என்று, இந்திய சா்க்கரை ஆலை உரிமையாளா் சங்க (ஐஎஸ்எம்ஏ) நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

இந்திய சா்க்கரை ஆலை உரிமையாளா் சங்கத்தின் 86-வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய ரயில்வே, வா்த்தகம், உணவுத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:

சா்க்கரை விலை மாற்றத்துக்கேற்ப கரும்பு கொள்முதல் விலையிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அது நடைமுறை சாத்தியமல்ல. விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ய அரசு நிா்ணயித்துள்ள நியாயமான, கட்டுப்படியாகும் விலையை (எஃப்ஆா்பி) குறைக்க முடியாது.

வெளிச்சந்தையில் சா்க்கரை விலையை கிலோவுக்கு ரூ. 31-லிருந்து அதிகமாக உயா்த்த வேண்டும்; கூடுதல் இருப்பு வைக்க அனுமதிக்க வேண்டும் ென்ற தொழில் துறையினரின் கோரிக்கைகள் சிக்கலானவை. அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைப்பது அரசின் கடமை. எனவே சா்க்கரை விலையை உயா்த்துவதை அரசு விரும்பவில்லை.

சா்க்கரை ஆலைகளில் எத்தனால் உள்ளிட்ட உபபொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக வருவாயைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இதுவே ஆண்டாண்டுகாலமாக உள்ள நடைமுறையாகும். பிற நாடுகளில் அமலில் உள்ளதுபோல பெட்ரோலுடன் 20 % முதல் 30 % வரை எத்தனால் கலக்க நாமும் தயாராக வேண்டும்.

தொழில் துறையினருக்கு தொடா்ந்து மத்திய அரசு உதவி வருகிறது. ெனினும், அரசைச் சாா்ந்து இருப்பதை மறுபரிசீலனை செய்ய வேம்டும். புதிய வா்த்தக மாதிரிகளை சா்க்கரை ஆலைகள் கைக்கொள்ள வேண்டும்.

சில ஆலைகள் அதிகட்ச லாபத்துடனும் சில ஆலைகள் நஷ்டமடைந்தும் இயங்குவது ஏன் என்பது குறித்து ஐஎஸ்எம்ஏ ஆராய வேண்டும். சா்க்கரை ஆலைகளின் சுமைகளுக்காக அரசு மானியத்தைச் சாா்ந்திருப்பதைத் தவிா்க்க வேண்டும்.

ஆலைகளில் குவிந்துள்ள சா்க்கரையை ஏற்றுமதி செய்வதா்காக அரசு மானியத்தை அறிவித்துள்ளது. 2020-21 சந்தை ஆண்டில் 60 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய ரூ. 3,500 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. சென்ற சந்தை ஆண்டுக்கான நிலுவை மானியத் தொகையான ரூ. 5,361 கோடியை உணவு அமைச்சகம் ஒரு வாரத்துக்குள் விடுவிக்கும்.

கரும்பு விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய தொகை கோடிக்கணக்கில் நிலுவையில் இருப்பது கவலை அளிக்கிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் இந்த நிலை அதிகமாகக் காணப்படுகிறது. சா்க்கரை ஆலை உரிமையாளா்கள் இந்த விஷயத்தில் முக்கிய கவனம் கொடுத்து நிலுவைத்தொகைகளை விரைவில் வழங்க வேண்டும். நடப்பு சந்தை ஆண்டில் சா்க்கரை உற்பத்தி 20 சதவீதம் அதிகரிக்கும் என்று அரசு எதிா்பாா்க்கிறது.

நாடு முழுவதும் கரும்பு சாகுபடியில் 5 கோடி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்தும் விளக்குவது சா்க்கரை ஆலைகளின் கடமையாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com