தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கர்நாடகம்: 10, 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு

கர்நாடகத்தில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கர்நாடகம்: 10, 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு (கோப்புப்படம்)
Updated On :19 டிசம்பர் 2020, 10:39 am

DIN


பெங்களூரு: கர்நாடகத்தில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பள்ளிகளில் வருகைப்பதிவு கட்டாயமில்லை என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பள்ளிக்கு வராத மாணவர்களுக்காக இணைய வழியிலும் பாடங்கள் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் மீண்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர் எடியூரப்பா, மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர்,  தலைமைச் செயலாளர் ரவிக்குமார் உள்பட அதிகாரிகளுடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சுமார் ஒருமணிநேரத்திற்கு இந்த ஆலோசனை நடைபெற்றது. பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக ஒரு மாதத்தில் 15 நாள்களுக்கு பள்ளிகளை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து படிப்படியாக முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பு பள்ளிக் கட்டடங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.