இந்தியாவின் விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாக வடகிழக்கு மாகாணங்கள் வளரும்: ஜிதேந்திர சிங் நம்பிக்கை

கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் வடகிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் விரும்பத்தக்க சுற்றுலாத்தலமாகவும், வர்த்தக மையமாகவும் வளர்ச்சி அடையும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 
இந்தியாவின் விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாக வடகிழக்கு மாகாணங்கள் வளரும்: ஜிதேந்திர சிங் நம்பிக்கை
Updated on
1 min read

கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் வடகிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் விரும்பத்தக்க சுற்றுலாத்தலமாகவும், வர்த்தக மையமாகவும் வளர்ச்சி அடையும் என்று வடகிழக்கு மாகாண வளர்ச்சிக்கான மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

8-வது வடகிழக்குத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டு பேசிய அவர், மிகப்பெரும் இயற்கை மற்றும் மனித ஆற்றலின் ஆதரவுடன் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் வடகிழக்கு மாகாணங்கள் முன்னிலை வகிக்கும் என்றும், ஐரோப்பிய சுற்றுலாத்தலங்களுக்கு மாற்றாக இவை செயல்படும் என்றும் தெரிவித்தார்.

வடகிழக்கு மாகாணங்களில் அதிகம் விளையும் மூங்கில் போன்ற இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு உள்ளூர் பொருள்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

அசாம், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், மூத்த அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்களா சிறப்புரை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com