வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தில்லியில் மூன்றாவது கரோனா அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது: கேஜரிவால்

தில்லியில் கரோனா மூன்றாவது அலை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தகவல் தெரிவித்துள்ளார். 

News image
Seems third wave of COVID-19 in Delhi brought under control: Arvind Kejriwal
Updated On :19 டிசம்பர் 2020, 9:36 am

DIN

தில்லியில் கரோனா மூன்றாவது அலை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தகவல் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், இன்றைய நிலவரப்படி தில்லியில் புதிதாக 1,133 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 1.5 சதவீதத்திற்கும் குறைவான விகிதத்தில் தொற்று பதிவாகியுள்ளன. 

கடந்த நவம்பர் மாதத்தில் தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட 8,600 ஆக இருந்தன. ஆனாலும் கூட தில்லியில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தவில்லை. மருத்துவமனையில் படுக்கை வசதிகள் தாராளமாக இருந்ததே இதற்கு காரணம். கரோனாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் இணைந்து ஒன்றாகப் போராடினோம். எனவே, தினசரி பாதிப்பு குறைந்துள்ளதாக ஆன்லைன் மாநாட்டில் அவர் கூறியுள்ளார். 

நவம்பர் தொடக்கத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 15.26 சதவீதமாக இருந்தது. தற்போது தொற்று 1.3 சதவீதமாகக் குறையத் தொடங்கியுள்ளது. தில்லியின் நிலைமை கணிசமாக முன்னேறியுள்ளது. இது இதுவரை இல்லாத மிகக் குறைவான ஒன்றாகும், தில்லி மக்களின் ஒத்துழைப்புடன் கரோனா மூன்றாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது  என்றார். 

நவம்பர் மாதத்தில் சுமார் 45,000 பேர் மருத்துவமனை சிகிச்சையில் இருந்துவந்தனர். ஆனால் தற்போது இது சுமார் 12,000 ஆகக் குறைந்துள்ளன. தில்லி அரசு பரிசோதனை தகவல்களைத் தவறாக வெளியிடுவதாகச் சிலர் பொய் தகவல் பரப்பி வந்தனர். ஆனால், நான் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன். தில்லியில் நடத்தப்படும் சோதனை புள்ளிவிவரங்கள் அனைத்தும் உண்மையானவையே.

மேலும், கரோனா பணியில் ஈடுபடும் முன்னணி தொழிலாளர்களுக்கும், அரசியல் கட்சிகள் மற்றும் மத நிறுவனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று அவர் கூறியுள்ளார். 

தொற்று குறைந்துள்ளதால், கரோனா ஒழிந்துவிட்டது என்று மனநிறைவுடன் இருக்க முடியாது. மக்கள் இன்னும் விழிப்புடன் செயல்படவும். முகக்கவசங்களை அணிவது, சமூக விலகலைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.