‘இரு ஆண்டுகளில் சுங்கச் சாவடி இல்லாத இந்தியா‘: நிதின் கட்கரி
‘ஜிபிஎஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அடுத்த இரண்டு


‘ஜிபிஎஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கச் சாவடிகளே இல்லாத இந்தியா உருவாக்கப்படும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.
தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
நாடு முழுவதும் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறையை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், வாகனங்களின் இயக்கத்தின் அடிப்படையில், அந்த வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாக சுங்கக் கட்டணத்துக்கான தொகை எடுத்துக்கொள்ளப்படும். இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளே இல்லாத நிலை உருவாகும்.
இப்போது, புதிதாக வரும் அனைத்து வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களிலும், வாகனம் இருக்குமிடத்தைக் கண்டறியும் (ஜிபிஎஸ்) தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளன. அதுபோல, பழைய வணிக வாகனங்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பொருத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
வரும் 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாத அளவில் சுங்கக் கட்டண வசூல் ரூ. 34,000 கோடியை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. புதிய ஜிபிஎஸ் சுங்கக் கட்டண வசூல் நடைமுறை அறிமுகப்படுத்துவதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1.34 லட்சம் கோடி (1.34 டிரில்லியன்) வருவாய் அரசுக்கு கிடைக்கும்.
சுங்கக் கட்டண வசூலில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுத்து, வெளிப்படைத்தன்மையை இந்த புதிய நடைமுறை உறுதிப்படுத்தும் என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...