நாட்டின் மொத்த பாதிப்பில் கேரள, மகாராஷ்டிரத்தில் மட்டும் 40% கரோனா

நாட்டில் தற்போது மொத்த கரோனா பாதிப்பில் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மட்டும் 40 சதவிகிதம் கரோனா பதிவாகியுள்ளதாக மத்திய சுதாகாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


நாட்டில் தற்போது மொத்த கரோனா பாதிப்பில் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மட்டும் 40 சதவிகிதம் கரோனா பதிவாகியுள்ளதாக மத்திய சுதாகாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 26,624 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1,00,31,223 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து 95.8 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு 3.5 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பில் 40 சதவிகிதம் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மட்டுமே உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மற்ற 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com