மகாராஷ்டிரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த ஆறு மாதங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மும்பையில் இது குறித்து பேசிய அவர், கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் மீண்டும் இரவு பொது முடக்கமோ அல்லது முழு முடக்கமோ அறிவிக்கப்படாது.
வருமுன் காப்பதே சிறந்தது. அதனால் அடுத்த 6 மாதங்களுக்கு பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் மகாராஷ்டிரத்தில் நேற்று (சனிக்கிழமை) 3,940 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,92,707- ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி புதிதாக 74 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48,648-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில் வாக்குப் பதிவு தொடங்கியது
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


