2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: அமித் ஷா

மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புவதாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

News image
மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: அமித் ஷா
Updated On :20 டிசம்பர் 2020, 11:14 am

DIN

மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புவதாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அமித் ஷா, இன்று இரண்டாவது நாளாக பயணம் செய்து வருகிறார்.

பிர்பும் மாவட்டம் போல்பூர் பகுதியில் பாடகர் ஒருவர் வீட்டில் மதிய உணவு உண்ட அவர், ஊர்வலமாக வாகனத்தில் வந்து மக்களை சந்தித்தார்.

போல்பூர் பகுதியில் அனுமன் மந்திர் மைதான சாலையில் தொடங்கி போல்பூர் எல்லை வரை ஊர்வலமாக சென்று மக்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, இதுபோன்ற மக்கள் கூட்டத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. இந்த கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி மீதான அன்பையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. 

மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் முதல்வர் மம்தா பானர்ஜி மீதான கோபத்தையே காட்டுகிறது என்று கூறினார்.

மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு ஒரு வாய்ப்பளியுங்கள். மேற்கு வங்கத்தை மாற்றியமைக்கிறோம் என்று கூட்டத்தில் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.