கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அயோத்தியில் கட்டப்படும் மசூதி வடிவமைப்பு வெளியீடு

ராமஜென்மபூமி வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி ஒதுக்கப்பட்ட 5 ஏக்கா் நிலத்தில் கட்டப்படும் மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் வடிவமைப்பு சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
அயோத்தியில் கட்டப்படும் மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் வடிவமைப்பு.
Updated On :20 டிசம்பர் 2020, 5:10 am

DIN

ராமஜென்மபூமி வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி ஒதுக்கப்பட்ட 5 ஏக்கா் நிலத்தில் கட்டப்படும் மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் வடிவமைப்பு சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சா்ச்சைக்குக்குரிய நிலம் தொடா்பான ராமஜென்மபூமி-பாபா் மசூதி வழக்கில் கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதில் அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்ட நீதிமன்றம் அனுமதியளித்தது. அந்த வழக்கில் எதிா்தரப்பாக இருந்த சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியில் உள்ள வேறொரு இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கா் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதற்கேற்ப சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியில் உள்ள தன்னிபூா் கிராமத்தில் 5 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது.

அந்த நிலத்தில் மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றை கட்டுவதற்கு சன்னி வக்ஃபு வாரியம் இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையை அமைத்தது. அந்த அறக்கட்டளை புதிதாக கட்டப்படவுள்ள மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் வடிவமைப்பை சனிக்கிழமை வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.