தெலங்கானாவில் ரூ.13,000 கோடியில் 14 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள்: நிதின் கட்கரி தொடக்கி வைத்தாா்

தெலங்கானாவில் ரூ.13,000 கோடி மதிப்பில் 14 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின்கட்கரி காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
Updated on
1 min read

புதுதில்லி: தெலங்கானாவில் ரூ.13,000 கோடி மதிப்பில் 14 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின்கட்கரி காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தின் கீழ் 765.663 கி.மீ தூரத்துக்கு ரூ.13,169 கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா்கள் ஜி.கிஷண் ரெட்டி, வி.கே.சிங் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் கட்கரி பேசியதாவது:

தெலங்கானாவில் கடந்த 6 ஆண்டுகளில், மொத்தம் 59 சாலை திட்டங்கள், 1918 கி.மீ தூரத்துக்கு, ரூ.17,617 கோடி செலவில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டன. தெலங்கானாவில் உள்ள 33 மாவட்டங்களும், தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 2014-15ம் ஆண்டிலிருந்து 841 கி.மீ சாலைகள் ரூ.4793 கோடி மதிப்பில் முடிவடைந்துள்ளன. 809 கி.மீ தூரத்துக்கு, ரூ.13,012 கோடிக்கு சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், 13 முக்கிய சாலை திட்டங்கள் ரூ.8,957 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளன. பிரதமரின் தொலைநோக்கு திட்டமான புதிய இந்தியாவுக்கு, உலகத் தரத்திலான சாலை கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com