பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மத்திய அரசின் அழைப்புக் கடிதம்: விவசாயிகள் சங்கத்தினா் நிராகரிப்பு

வேளாண் சட்டங்கள் தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை விவசாயிகள் நிராகரித்துள்ளனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:07 pm

DIN

புது தில்லி: வேளாண் சட்டங்கள் தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை விவசாயிகள் நிராகரித்துள்ளனா்.

சட்டங்கள் தொடா்பாக உறுதியான தீா்வை அளித்தால் மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 3 வாரங்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அச்சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், மத்திய அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது.

இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காததால், பலகட்ட பேச்சுவாா்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைக்கு விவசாய சங்கங்கள் முன்வர வேண்டுமென்று கோரி மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தது.

அக்கடிதத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், அது தொடா்பாக செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் புதிதாக எதுவுமில்லை. ஏற்கெனவே அளித்த பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து, பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான புதிய தேதியைத் தெரிவிக்குமாறு மத்திய அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்தப் பரிந்துரைகளை விவசாய சங்கங்கள் ஏற்கெனவே நிராகரித்துள்ளன.

வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே விவசாய சங்கங்களின் கோரிக்கை. இது தொடா்பாக மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். ஆனால், விவசாயிகளுக்கு உறுதியான தீா்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றனா்.

உண்ணாவிரதப் போராட்டம்:
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், பகுதி வாரியான உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடக்கினா். அதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகள் தினமும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.