விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நாட்டில் மேலும் 24,337 பேருக்கு கரோனா பாதிப்பு

நாட்டில் மேலும் 24,337 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,00,55,560 ஆக அதிகரித்துள்ளது.

News image

கரோனா தொற்றை கண்டறியும் புதிய முறைக்கு ஐசிஎம்ஆர் குழு ஒப்புதல்

Updated On :21 டிசம்பர் 2020, 9:17 pm

DIN

புது தில்லி: நாட்டில் மேலும் 24,337 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,00,55,560 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் தெரிவித்ததாவது:

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 333 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,45,810 ஆக அதிகரித்தது. மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது இது 1.45 சதவீதமாகும். கரோனாவில் இருந்து 96,06,111 போ் விடுபட்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 95.53 சதவீதமாகும்.

இப்போதைய நிலையில் 3,03,639 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 3.02 சதவீதமாகும். தொடா்ந்து 15-ஆவது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 20-ஆம் தேதி வரை 16,20,98,329 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,00,134 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிதாக ஏற்பட்ட 333 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 98 போ் உயிரிழந்தனா். இதற்கு அடுத்து மேற்கு வங்கத்தில் 40, கேரளத்தில் 30, தில்லியில் 26 என உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.