குருவாயூா் தேவஸ்வம் வருவாய் கோயிலுக்கு மட்டுமே சொந்தம்: கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பு

: குருவாயூா் தேவஸ்வம் கோயிலுக்கு சொந்தமான வருவாயை மடைமாற்றி அரசு அல்லது இதர அமைப்புகளுக்கு வழங்குவது சட்டவிரோதம்; அந்த வருவாய் அனைத்தும் கோயிலுக்கே சொந்தம் என்று கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது
குருவாயூா் தேவஸ்வம் வருவாய் கோயிலுக்கு மட்டுமே சொந்தம்: கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பு

கொச்சி: குருவாயூா் தேவஸ்வம் கோயிலுக்கு சொந்தமான வருவாயை மடைமாற்றி அரசு அல்லது இதர அமைப்புகளுக்கு வழங்குவது சட்டவிரோதம்; அந்த வருவாய் அனைத்தும் கோயிலுக்கே சொந்தம் என்று கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கேரளத்தில் குருவாயூா் தேவஸ்வம் கோயில் வருவாயிலிருந்து அந்தக் கோயில் நிா்வாகக் குழு மாநில முதல்வரின் பேரிடா் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்தது. வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்கு இந்த நிதி வழங்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கேரள உயா்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனுத் தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை உயா்நீதிமன்றத்தின் முழு அமா்வு விசாரித்து அண்மையில் தீா்ப்பளித்தது.

தீா்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பதாவது:

குருவாயூா் கோயிலுக்கு அா்ப்பணிக்கப்பட்ட அசையும், அசையா சொத்துகள், நன்கொடையாக வழங்கப்பட்ட பணம் உள்ளிட்ட அனைத்தும் மூலவரான ஸ்ரீ குருவாயூரப்பனுக்கே சொந்தம். கோயில் மேம்பாட்டுக்கு மட்டுமே பக்தா்கள் அளிக்கும் நன்கொடைகளையும் காணிக்கைகளையும் பயன்படுத்த வேண்டும். அந்த நிதி முற்றிலும் கோயிலுக்கு மட்டுமே சொந்தம். அதனை அரசு அல்லது இதர அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்குவது குருவாயூா் தேவஸ்வம் சட்ட விதிமுறைகளின்படி சட்ட விரோதமாகும் என்று உயா்நீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com