டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன்

இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 4:46 am

DIN

இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் ஜனவரியின் எந்த வாரத்திலும் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம். கரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் கடந்த 4 மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. 
கரோனா தடுப்பூசி செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியளார்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள், முதியோர் உள்பட 30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு, தடுப்பூசியின் வீரியம்தான் எங்களுக்கு முக்கியம்.  
ஃபைசர் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். கரோனாவால் பாதிக்கப்பட்ட 1 கோடிக்கும் மேற்பட்டோரில் 95 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.