மோதிலால் வோரா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் மோதிலால் வோரா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் மோதிலால் வோரா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான மோதிலால் வோரா(93) உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.
சமீபத்தில் கரோனா தொடரிலிருந்து மீண்ட அவர், நுரையீரல் தொற்று, சிறுநீரகப் பிரச்னை காரணமாக தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இவர் 2002 முதல் 2018 வரை 16 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பொருளாராக இருந்துள்ளார். மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்துள்ளார். அவரது இறுதிச்சடங்குகள் சொந்த மாநிலமான சத்தீஸ்கரில் நாளை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது மறைவிற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மோதிலால் வோரா, ஒரு அரசியல் வாழ்க்கையில் பரந்த நிர்வாக அனுபவங்களைக் கொண்டிருந்தவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...