மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிறுத்தைகள் அதிகரிப்பு: பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 10:21 pm

DIN

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். விலங்குகள் பாதுகாப்பான வாழ்விடங்களில் வசிப்பதை உறுதி செய்ய இந்த முயற்சிகள் தொடர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 12,852 சிறுத்தைகள் இருப்பதாகவும், 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்திருப்பதாகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் திங்கள்கிழமை தெரிவித்தார். புலிகள், சிங்கங்களை அடுத்து சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை இந்தியா நன்றாக பாதுகாத்து வருவதைக் குறிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது: சிங்கங்கள், புலிகளுக்கு அடுத்து சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சிறப்பான செய்தி. விலங்குகளின் பாதுகாப்புக்காக பணியாற்றிவரும் அனைவருக்கும் பாராட்டுகள். நாம் இந்த முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு, விலங்குகள் பாதுகாப்பான வாழ்விடங்களில் வசிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.