

மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கங்களைத் தாண்டாது என தேர்தல் செயற்பாட்டாளர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களது பிரசார பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பிரபல தேர்தல் செயற்பாட்டாளரான பிரசாந்த் கிஷோர் பாஜக தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆலோசகராக ஒப்பந்தமாகியுள்ள பிரசாந்த் கிஷோர், “ சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டப் போராடும். அவர்கள் 100 இடங்களுக்கும் குறைவாகவே பெறுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனது கணிப்பை விட அதிக இடங்களை பாஜக வென்றால் தான் தனது வேலையை விட்டு விடுவதாகத் தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர் அவ்வாறு 100க்கும் குறைவான இடங்களைப் பெற்றால் பாஜக தலைவர்கள் பதவி விலகுவார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.