‘அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் மத்திய அரசு’: சரத் பவார்
மேற்கு வங்க மாநிலத்தின் மம்தா அரசை சீர்குலைக்க மத்திய அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டியுள்ளார்.


மேற்கு வங்க மாநிலத்தின் மம்தா அரசை சீர்குலைக்க மத்திய அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சுற்றுப்பயணம் செல்லும் போது அவரது வாகனம் தாக்கப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் உள்ள இந்திய காவல் பணி அதிகாரிகள் 3 பேரை பணியிடமாற்றம் செய்து மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதற்கு மாநில அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மத்திய அரசு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கு வங்க அரசின் உறுதித்தன்மையை சீர்குலைக்க முயன்று வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மாநில அரசின் ஒப்புதலின்றி மேற்கு வங்க அரசின் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடுவது குறித்து தனது கட்சியின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...