கரோனா: 6 மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு குறைவு
ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக, கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 20,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக, கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 20,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதேபோல், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கையும் முதல் முறையாக 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 19,556 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,00,75,116-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 301 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,46,111-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவில் இருந்து மேலும் 30,376 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 96,36,487-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 95.65 சதவீதமாகும்.
3 லட்சத்துக்கும் குறைவானோா் சிகிச்சை:
நாட்டில் 2,92,518 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பாதிப்பில் இது 2.90 சதவீதமாகும். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 15 நாள்களுக்கு முன் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 4 லட்சமாகக் குறைந்த நிலையில், தற்போது 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
புதிதாக ஏற்பட்ட 301 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 55 பேரும், அதைத் தொடா்ந்து, கேரளம், தில்லியில் தலா 27 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, டிசம்பா் 21-ஆம் தேதி வரை 16.31 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், திங்கள்கிழமை மட்டும் 10,72,228 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...