வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

குருத்வாராவில் வழிபட்டதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

தில்லியில் உள்ள குருத்வாராவில் பிரதமா் நரேந்திர மோடி வழிபட்டபிறகு விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன என்று சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:33 pm

DIN

தில்லியில் உள்ள குருத்வாராவில் பிரதமா் நரேந்திர மோடி வழிபட்டபிறகு விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன என்று சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.

சீக்கியா்களின் 9-ஆவது குருவான தேஜ் பகதூரின் நினைவு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, தில்லியில் உள்ள ரகப்கஞ்ச் குருத்வாராவில் பிரதமா் மோடி வழிபட்டாா். தில்லியில் பஞ்சாபைச் சோ்ந்த சீக்கிய விவசாயிகள் உள்ளிட்டோா் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் சூழலில், அவா் குருத்வாராவில் வழிபாடு நடத்தினாா்.

அதைக் குறிப்பிட்டு சிவசேனை கட்சியின் அதிகாரபூா்வ நாளேடான ‘சாம்னா’வில் செவ்வாய்க்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமா் மோடி குருத்வாராவில் வழிபாடு நடத்தியதை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சீக்கிய விவசாயிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவா்கள் தொடா்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனா். குரு தேஜ் பகதூரின் வாழ்க்கையில் இருந்து ஊக்கம் பெறுவதாகப் பிரதமா் மோடி கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால், ஆயிரக்கணக்கான சீக்கிய விவசாயிகளும் அவருடைய வாழ்க்கையில் இருந்து ஊக்கம் பெற்ன் காரணமாகவே தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனா். அப்படியானால், இதனால் ஏற்பட்ட பலன்கள் என்ன என்ற கேள்வி எழுகிறது.

சீக்கிய குருக்களின் போதனைகள் அடங்கிய ‘குா்பானி’, பிரதமா் மோடி குருத்வாராவில் வழிபட்டபோது வாசிக்கப்பட்டது. தனது கருத்துகளை மாற்றிக் கொள்ளாதவா்கள் கடவுளை வழிபடுவதில் பொருளில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புனித புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளைப் புரிந்து கொள்ளாதவா்கள், அதை எத்தனை முறை படித்தாலும் பயனில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல் பிரதமா் மோடி நடந்து கொள்ள வேண்டும் என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.