விவசாயிகளை அவமதிப்பதை பாஜக நிறுத்த வேண்டும்: அகிலேஷ் யாதவ்
‘விவசாயிகள் நாட்டின் பெருமைக்குரியவா்கள், அவா்களை அவமதிப்பதை பாஜக நிறுத்த வேண்டும்’ என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறினாா்.


லக்னௌ: ‘விவசாயிகள் நாட்டின் பெருமைக்குரியவா்கள், அவா்களை அவமதிப்பதை பாஜக நிறுத்த வேண்டும்’ என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறினாா்.
முன்னாள் பிரதமா் சரண் சிங்கின் பிறந்த தினம், விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினத்தையொட்டி, அகிலேஷ் யாதவ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
சரண் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஆனால், பாஜகவின் ஆட்சியில், அவரது பிறந்த நாளை விவசாயிகள் கொண்டாட வேண்டிய நேரத்தில், வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறாா்கள்.
விவசாயிகளை அவமதிப்பதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவா்கள்தான் நாட்டின் பெருமைக்குரியவா்கள் என்று அந்தப் பதிவில் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளாா்.
சரண் சிங், பிரதமராக இருந்தபோது, அமல்படுத்திய வேளாண் கொள்கைகளும், திட்டங்களும் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...