2 கோடி கையெழுத்துகள்: குடியரசுத் தலைவருடன் ராகுல் காந்தி நாளை சந்திப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராகுல் காந்தி நாளை (வியாழக்கிழமை) அளிக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராகுல் காந்தி நாளை (வியாழக்கிழமை) அளிக்கிறார்.

இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ் தில்லியில் புதன்கிழமை தெரிவித்தது:

"விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்குமாறு குடியரசுத் தலைவரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினர். ஆனால், குடியரசுத் தலைவரிடமிருந்தும், அரசிடமிருந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நாளை காலை 10.45 மணிக்கு விஜய் சௌக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை காங்கிரஸ் எம்.பி.களுடன் சேர்ந்து ராகுல் காந்தி பேரணி மேற்கொள்ளவுள்ளார்.

அதன்பிறகு, ராகுல் காந்தியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு அவர் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக 2 கோடி கையெழுத்துகளை அவரிடம் அளிக்கவுள்ளனர்."

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் தொடர்ந்து 28-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com