

கொல்கத்தா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசர அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியாவின் கொல்கத்தா-ஹைதராபாத் விமானம் புதன்கிழமை புறப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்தார்.
இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் கூறியதாவது: கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உடனடியாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இந்திய தலைமை நீதிபதி இருந்தார். அவர் வியாழக்கிழமை ஹைதராபாத் புறப்படுவதாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.