மேற்குவங்கத் தேர்தல்: இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு

நடைபெற உள்ள மேற்குவங்க பேரவைத் தேர்தலை இடதுசாரிகளுடன் சந்திக்க உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி வியாழக்கிழமை அறிவித்தார்.

மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் கட்சி இடதுசாரி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ள மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, “மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க கட்சியின் உயர்நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழு காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து மேற்குவங்கத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com