பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மக்கள் பிரதிநிதிகளை அனுமதிப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை? பிரியங்கா

குடியரசுத் தலைவரை சந்திக்க மக்கள் பிரதிநிதிகளை அனுமதிப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)
Updated On :24 டிசம்பர் 2020, 7:00 am

DIN

குடியரசுத் தலைவரை சந்திக்க மக்கள் பிரதிநிதிகளை அனுமதிப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் மக்கள் பிரச்னைகளுக்காகவே குடியரசுத் தலைவரை சந்திக்க பேரணி மேற்கொண்டனர் என்றும் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பிரச்னைகளுக்காக குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதியில்லையா?. விவசாயிகளின் பிரச்னைகளுக்காக குரல்கொடுத்து இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டது.

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். நாட்டு மக்கள் எம்.பி.க்களை தேர்வு செய்தனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவரை சந்திக்க உரிமையுள்ளது. அவர்கள் அனுமதிக்கப்படவேண்டும். இதில் அரசுக்கு என்ன பிரச்னை?. எல்லையில் லட்சக் கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க அரசுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக குடியரசுத் தலைவரிடம் 2 கோடி கையெழுத்துகளை அளிக்க பேரணி மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.