‘வேளாண் சட்டங்கள் பலனளிக்காவிட்டால் திருத்தம் செய்யலாம்’: ராஜ்நாத் சிங்

வேளாண் சட்டங்களை ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளோ செயல்படுத்தி அவை விவசாயிகளுக்கு பலனளிக்கவில்லை என்றால் அவற்றில் திருத்தம் செய்யலாம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளோ செயல்படுத்தி அவை விவசாயிகளுக்கு பலனளிக்கவில்லை என்றால் அவற்றில் திருத்தம் செய்யலாம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 30 ஆவது நாளை அடைந்துள்ள நிலையில் உறுதியான முடிவுகள் எதுவும் இதுவரை மத்திய அரசின் சார்பில் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “வேளாண் சட்டங்களை ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தலாம். வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்குப் பலன் ஏற்படவில்லையென்றால் அவற்றில் திருத்தம் மேற்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ள ராஜ்நாத்சிங் அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com