2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமித் ஷா

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு திறந்த மனதுடன் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

News image
உள்துறை அமைச்சர் அமித் ஷா
Updated On :25 டிசம்பர் 2020, 8:45 am

DIN


விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு திறந்த மனதுடன் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து தவறான வழியில் விவசாயிகள் வழிநடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தில்லி மெஹ்ராலி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அமித் ஷா,  ''9 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என 18 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார். 

பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பி நரேந்திர மோடி என்பது தெரிகிறது.

குறைந்த பட்ச ஆதரவு விலை விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர். இதனை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்த ஆபத்தும் நேராது.

மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு ஆதரவானதுதான். யாராலும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அல்லது விவசாயிகளின் நிலத்தை பறிக்க முடியாது. விவாசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு திறந்த மனதுடன் தயாராகவுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.