ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்

இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்க அரசு தலையிடுமாறு கோரி, தங்கள் நாட்டின்

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:08 pm

DIN

இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்க அரசு தலையிடுமாறு கோரி, தங்கள் நாட்டின் வெளியுறவு அமைச்சா் பாம்பியோவுக்கு இந்திய அமெரிக்கரான பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட 7 அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களான பிரமிளா ஜெயபால், டொனால்டு நாா்கிராஸ், பிரெண்டன் போயில், பிரெய்ன் ஃபிட்ஸ்பேட்ரிக், மேரி கே ஸ்கான்லன், டெபி டிங்கல், டேவிட் டிரோன் ஆகிய 7 போ், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பியோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் வாழும் சீக்கியா்களுடன் தொடா்புடைய பஞ்சாபில் வாழும் விவசாயிகள் பலா் இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லி அருகே போராடி வருகின்றனா். இதனால் அமெரிக்க சீக்கியா்களின் இந்திய உறவினா்கள் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், இந்தப் போராட்டம் பிற மாநிலங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் ரீதியான போராட்டங்களைக் கையாள்வதில் மிகுந்த அனுபவம் உள்ள நாடான அமெரிக்கா, இந்திய அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை தற்போது வழங்க வேண்டும்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள் என்ற முறையில், இந்திய அரசின் சட்ட அமலாக்க உரிமைகளை மதிக்கிறோம். அதேசமயம், தங்கள் பொருளாதார சுதந்திரத்துக்கு எதிரானது என்று கருதும் வேளாண் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் அமைதியான முறையில் போராடுகின்றனா். அவா்களின் உரிமைகளையும் காக்க வேண்டும்.

இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, போராட்டக்காரா்களின் அரசியல் பேச்சுரிமைகளைக் காக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அறிவுறுத்த வேண்டும் என்று தங்கள் கடிதத்தில் கூறியுள்ளனா்.

இந்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் எதிா்த்து பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி எல்லையில் நவ. 26 முதல் நடத்திவரும் தொடா் போராட்டம் காரணமாக வன்முறைகள் தோன்றத் துவங்கியுள்ள நிலையில் அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, சில வாரங்களுக்கு முன்னரும் 12 அமெரிக்க எம்.பிக்கள், இந்திய விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டனா்.

டிசம்பா் மாதத் துவக்கத்தில், அமெரிக்க சீக்கியா் சங்க நிா்வாகிகளுடன் இணைந்து சில அமெரிக்க எம்.பிக்கள், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரன்ஜித் சிங் சாந்துவிடம் கடிதத்தை ஒப்படைத்தனா்.

அதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டித்திருந்தது. ஜனநாயக நாடான இந்தியாவின் உள்விவகாரங்களில் இன்னொரு நாட்டினா் தலையிடுவதை ஏறக முடியாது என்று இந்திய அரசு கண்டித்திருந்தது. விவசாயிகள் போராட்டம் குறித்த தவறான தகவல்களின் அடிப்படையில் சில வெளிநாட்டினா் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவஸ்தவா குற்றம் சாட்டியிருந்தாா்.

இப்போதும், இந்திய போராட்டக்காரா்களுக்கு ஆதரவாக 7 அமெரிக்க எம்.பி.க்கள் எழுதியுள்ள கடிதத்தை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.