சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வேளாண் சட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும்: ம.பி. முதல்வர் அறிவிப்பு

மத்தியப் பிரதேசத்தில் விரைவில் 3 வேளாண் சட்டங்களும் அமல்படுத்தப்படும் எனவும் அதில் குழப்பம் எதுவும் இல்லை எனவும் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
வேளாண் சட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும்: ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் செளகான்
Updated On :26 டிசம்பர் 2020, 12:18 pm

DIN

மத்தியப் பிரதேசத்தில் விரைவில் 3 வேளாண் சட்டங்களும் அமல்படுத்தப்படும் எனவும் அதில் குழப்பம் எதுவும் இல்லை எனவும் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் சனிக்கிழமை தெரிவித்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில் பாஜக ஆளும் மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களும் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதில் எந்த குழப்பமும் இல்லை எனவும் குறைந்தபட்ச ஆதார விலையில் விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படும் எனவும் அவர் சனிக்கிழமை தெரிவித்தார். மாநில விவசாயிகள் வேளாண் சட்டங்களை நன்கு புரிந்துகொண்டு பயன்பெற மாநில அரசு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வேளாண் சட்டங்களைக் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.