தில்லி சென்றடைந்த மகாராஷ்டிர விவசாயிகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிரத்தை சேர்ந்த விவசாயிகள் தில்லி எல்லையை சென்றடைந்துள்ளனர்.


வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிரத்தை சேர்ந்த விவசாயிகள் தில்லி எல்லையை சென்றடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நாசிக் பகுதியிலிருந்து கடந்த திங்கள் கிழமை தில்லி நோக்கி வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர்.
அகில இந்திய கிசான் சபை தலைமையில் புறப்பட்ட விவசாயிகள் இன்று (டிச.26) தில்லி எல்லையை சென்றடைந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் உற்சாக வர்வேற்பளித்தனர்.
இது குறித்து பேசிய அகில இந்திய கிசான் சபையின் செயலாளர் அஜிட் நாவ்லே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் எங்களை வரவேற்றனர். போராட்டத்தில் பங்கேற்க வந்ததற்காக அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் ஆர்வமுடன் உள்ளதாகவும், ஆனால் மூன்று வேளாண் சட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு பாதமகாகவுள்ள உட்பிரிவுகளை நீக்க வேண்டும் என்று தெரிவித்ததாகக் கூறினார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 31 நாள்களாக தில்லியின் பல்வேறு எல்லைகளில் போராடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...