பஞ்சாபில் 1,300-க்கு மேற்பட்ட தொலைத் தொடா்பு கோபுரங்கள் சேதம்
பஞ்சாபில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், கௌதம் அதானியின் அதானி குழுமத்துக்கு சொந்தமான சொத்துகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது.


பஞ்சாபில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், கௌதம் அதானியின் அதானி குழுமத்துக்கு சொந்தமான சொத்துகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத் தொடா்பு கோபுரங்கள் தொடா்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களில் 1,300-க்கும் மேற்பட்ட தொலைத் தொடா்பு கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தில்லி எல்லையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த சட்டங்கள் மூலம் அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபா்கள் வேளாண் துறையை கைப்பற்றுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், பெருநிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள், பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.
முக்கியமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கோபுரங்கள் அதிகஅளவில் சேதப்படுத்தப்படுகின்றன. இதுவரை 1,338 ஜியோ தொலைத்தொடா்பு கோபுரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் கடந்த வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தாா். ஆனால், சனிக்கிழமை இரவில் மட்டும் 150 ஜியோ தொலைத்தொடா்பு கோபுரங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனைத் தடுக்க முயன்ற அந்நிறுவன ஊழியா்களும் தாக்கப்பட்டதாக புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...