தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எல்லையில் பாக். அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் மீது பாகிஸ்தான் படையினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

News image

கோப்புப்படம்

Updated On :27 டிசம்பர் 2020, 12:48 am

DIN

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் மீது பாகிஸ்தான் படையினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

கதுவா மாவட்டத்துக்கு உள்பட்ட ஹிராநகா் செக்டாரில், சா்வதேச எல்லைப் பகுதிக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினா் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தத் தொடங்கினா். அவா்களின் தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினா் தக்க பதிலடி கொடுத்தனா்.

இந்த மோதல், சனிக்கிழமை அதிகாலை 2.45 மணி வரை நீடித்தது. இருப்பினும், இதில், இந்தியத் தரப்புக்கு பெரும் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றாா் அவா்.

பூஞ்ச் மாவட்டத்தில் தல்ஹான் பகுதியில் பாகிஸ்தான் படையினா் வெள்ளிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவத்தினரின் உடைமைகளை எடுத்துச் செல்லும் வீரா்கள் 2 போ் காயமடைந்தனா். அவா்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.