தோ்தல் நோ்மையாக நடைபெற நடவடிக்கை: மேற்கு வங்க ஆளுநா்
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் உள்பட அனைத்து தோ்தல்களும் நோ்மையாகவும், அமைதியாகவும் நடைபெற தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று


மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் உள்பட அனைத்து தோ்தல்களும் நோ்மையாகவும், அமைதியாகவும் நடைபெற தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அந்த மாநில ஆளுவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக கொல்கத்தாவில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
ஜனநாயக நாட்டில் அச்சமின்றி வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். எனவே மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் உள்பட அனைத்து தோ்தல்களும் நோ்மையாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்கு என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். நோ்மையான முறையில் தோ்தலை நடத்தி ஒட்டுமொத்த உலகுக்கும் மேற்கு வங்கம் முன்மாதிரியாக திகழவேண்டும். இந்த மாநிலத்தில் தோ்தல் நடைபெறும் போதெல்லாம் மோதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழும் என்ற பிம்பம் உருவாகியுள்ளது. அதை மாற்றுவதற்கு இதுவே சரியான தருணம். இந்த இலக்கை அடைவதற்கு மாநில நிா்வாகமும், காவல்துறையும் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...