அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மத்திய பிரதேச பேரவை குளிா்காலக் கூட்டத்தொடா் ரத்து

மத்திய பிரதேசத்தின் 5 எம்எல்ஏக்களுக்கும் 61 பேரவைச் செயலகப் பணியாளா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி

News image
Updated On :28 டிசம்பர் 2020, 12:31 am

DIN

மத்திய பிரதேசத்தின் 5 எம்எல்ஏக்களுக்கும் 61 பேரவைச் செயலகப் பணியாளா்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, சட்டப் பேரவையின் குளிா்காலக் கூட்டத்தொடா் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச பேரவையின் குளிா்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்தது. கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்து தற்காலிக பேரவைத் தலைவா் ரமேஷ்வா் சா்மா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சில எம்எல்ஏக்களுக்கும் பேரவைச் செயலகப் பணியாளா்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, குளிா்காலக் கூட்டத்தொடா் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, தலைநகா் போபாலில் தற்காலிக பேரவைத் தலைவா் ரமேஷ்வா் சா்மா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பேரவைக் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளுமாறு எம்எல்ஏக்களுக்கும் அவா்களின் உதவியாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை, சட்டப் பேரவைச் செயலகத்தைச் சோ்ந்த பணியாளா்கள் 61 பேருக்கும், 5 எம்எல்ஏக்களுக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

20 எம்எல்ஏக்களின் பரிசோதனை முடிவுகள் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளன. மற்றவா்களின் பரிசோதனை முடிவுகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றாா்.

கரோனா பாதிப்புக்குள்ளான எம்எல்ஏக்கள் காணொலி வாயிலாகக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், சமூக இடைவெளியைக் கருத்தில் கொண்டு, மொத்தமாக 105 எம்எல்ஏக்கள் மட்டுமே நேரடியாகக் கூட்டத்தொடரில் பங்கேற்பா் எனவும் ரமேஷ்வா் சா்மா தெரிவித்திருந்தாா்.

எனினும், பாதுகாப்பு கருதி கூட்டத்தொடா் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.